உதகையில் பைக்காரா படகு இல்லத்திற்கு விரைவில் சுற்றுலா பயணிகள் செல்ல விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
உதகையில் புகழ் பெற்ற பைக்காரா படகு இல்லத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று ரசித்து வருகின்றனர்.
ஆனால், பைக்காரா படகு இல்லத்திற்கு வனப்பகுதியில் உள்ள சீரமைக்கப்படாத சாலையில் 2 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டி இருப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கையை ஏற்று, சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதன் 80 சதவீதம் பணி முடிவடைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லத்திற்கு செல்ல விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.