மத்திய அமைச்சராக பொறுப்பேறற எல்.முருகன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை துவங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தம்மை நம்பி தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்தின் பொறுப்புகளை மீண்டும் ஒருமுறை அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.
பிரதமரின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் தேசத்திற்கு சேவை செய்வதற்கும், “விக்சித் பாரத்” நோக்கி பாடுபடுவதற்கும் உறுதிபூண்டுள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.