நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை அடுத்து, 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். ஜூன் 26-ஆம் தேதி மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். எட்டு நாட்கள் நடைபெறும் சிறப்புக் கூட்டத் தொடர் ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என தகவல் வெளியாகி உள்ளது.