நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-ஆவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு கத்தார் மன்னர் ஷேக் தமீம் இப்னு ஹமத் அல் தானி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பரஸ்பர நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு வருகை தருமாறு கத்தார் மன்னருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.