டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-ல் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொள்கிறது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.