பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவேந்திரகுல தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திமாரியம்மன் திருக்கோயிலில், ஜூன் 7-ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு வழிபாடும், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக சக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருத்தேரில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.