மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்நாத்சிங் இன்று தமது பணிகளை தொடங்கினார்.
இதேபோல் அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி, பாண்டி சஞ்சய் உள்ளிட்டோரும் இன்று பொறுப்பேற்றனர்.
இதனிடையே பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கிரி சந்தித்து ஆசி பெற்றார்.