உலகம் முழுவதும் டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்கால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், உடனடியாக அங்கு பணியிலிருந்த 80 சதவீத ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார்.
இந்நிலையில் அவரது பாணியை கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்களும் கையிலெடுத்து, ஏராளமான ஊழியர்களை பண்நீக்கியுள்ளன.
தற்போது இதே பாணியை பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்பற்றுவதால், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் கதிகலங்கிப் போய் நிற்கின்றனர்.