புதுக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நமணசமுத்திரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் போதுமான கால அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் காலி செய்யப்படவில்லை.
இதனையடுத்து ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 48 வீடுகள், 16 கடைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.