2016-ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016-ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 1.1.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை, மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.