சென்னை தி.நகரில் உள்ள மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், “தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுகவின் வெற்றி நிரந்தரமானது அல்ல, தற்காலிமானது” என தெரிவித்தார்.