விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. அத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக தெரிவித்திருந்த நிலையில், அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவும் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கையில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஆட்சியாளர்களின் அதிகாரத்தில் தேர்தல் தவறாக நடத்தப்படுவதாக விமர்சித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாததால் தொண்டர்களின் உழைப்பு, நேரம், பணம் உள்ளிட்டவற்றை வீணாக்க விரும்பவில்லை என்றும் பிரேமலதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.