தூத்துக்குடியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
கோமஸ்புரம் அருகே அமைந்துள்ள ராஜீவ் காந்தி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த வீடுகள் கட்டப்பட்டு 8 ஆண்டுகளே ஆன நிலையில் பல வீடுகள் பழுதாகி இடியும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து பலமுறை வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் குடியிருப்பின் 1வது பிளாக்கின் 3வது தளத்தில் வசித்து வந்த அருண்பாண்டியன் என்ற இளைஞரின் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.