சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் முகாமிட்டுள்ள யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்டஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில் பவானிசாகர் அணை பூங்காவுக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு கதவுகளை சேதப்படுத்தியது.
இந்நிலையில் பூங்கா பகுதியில் முகாமிட்டுள்ள யானையை விரட்ட வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.