இந்திய கல்வி முறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘மதராஸின் முதல் பூர்வகுடி குரல் – காசுலு லட்சுமிநரசு செட்டி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்துக்காக தனது 25 ஆவது வயதில் இன்னுயிரை ஈந்த வாஞ்சிநாதனுக்கு மரியாதையையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
20-ஆம் நூற்றாண்டு முதல் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு திரித்து கூறப்பட்டதுடன், சிறப்பாக இருந்த நம் கல்விமுறையை ஆய்வு என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்ததாகவும் ஆளுநர் குற்றச்சாட்டினார்.
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நமது தாய்வழி கல்வி நிலையங்களை மூடியபோது வள்ளலார் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.