உலகிலேயே இந்தியாவில்தான் அதிக பெண்கள் வாக்களித்தனர்! - பிரதமர் நரேந்திர மோடி
Mar 17, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக பெண்கள் வாக்களித்தனர்! – பிரதமர் நரேந்திர மோடி

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரணாசியில், விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து முதல்முறையாக தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு நரேந்திர மோடி சென்றார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் விடுவித்தார். இதன் மூலம் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகள் பயன்பெறவுள்ளனர்.

மேலும், ‘வேளாண் தோழிகள்’ திட்டத்தின்கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30 ஆயிரம் பெண்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வாரணாசி மக்கள் எம்.பி.யை மட்டுமல்லாமல், பிரதமரையே தேர்ந்தெடுத்ததாக குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தலில் 31 கோடி பெண்கள் வாக்களித்ததை நினைவுக்கூர்ந்த பிரதமர், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவிலான பெண்கள் வாக்களித்ததாகவும், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட அமெரிக்க மக்கள் தொகைக்கு சமம் என்றும் தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் தொடர்ந்து மூன்று முறை ஒரே கட்சி ஆட்சிக்கு வருவது அரிது என்றும், தேர்தல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக அரசு ஹாட்ரிக் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து வாரணாசி தசாசுவமேத் படித்துறையில் பிரதமர் மோடி கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார். அப்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.

பின்னர் காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

Tags: Most women voted in India! - Prime Minister Narendra Modi
ShareTweetSendShare
Previous Post

புதுமை படைக்கும் கூகுள் தமிழில் ஜெமினி AI!

Next Post

காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Related News

ஆதவ் அர்ஜுனாவிற்கு அண்ணாமலை பதிலடி

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies