சென்னை அம்பத்தூரில் பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த நபர் கைது
செய்யப்பட்டார்.
அம்பத்தூர் எம்.கே.பி நகரைச் சேர்ந்த அருண் சற்று மனநலம் பாதிக்கபட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் தனது தந்தை மகேந்திரனிடம் பீடி தருமாறு கேட்டுள்ளார். இதனை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அருண் கல்லால் தாக்கியதில், மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அருணை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.