ஹரியானா மாநிலம் குருகிராமில் ட்ரோன் மூலம் மளிகை மற்றும் மருந்து பொருட்கள் விநியோகத்தை சோதனை முறையில் ஆராய்ச்சி மாணவர்கள் நிறைவேற்றி காட்டியுள்ளனர்.
ஏற்கெனவே நாட்டிலேயே முதன்முறையாக ஒடிசா மாநிலம் புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பிற மருத்துவமனைகளுக்கு ட்ரோனில் ரத்தம் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை அனுப்பும் திட்டம் கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.