சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே பேக்கிங் என்ஜின் தடம்புறண்டதால்
ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
திருப்பாச்சேத்தியில் இருந்து திருப்புவனம் வரையுள்ள ரயில் பாதையில் ஜல்லிகற்களை அகற்றி விட்டு மீண்டும் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பேக்கிங் என்ஜின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிக்காக திருப்பாச்சேத்தியிலிருந்து என்ஜின் கிளம்பியது.
அப்போது சிறிது தூரத்திலேயே பேக்கிங் என்ஜின், இருப்புப் பாதையை விட்டு விலகி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் என்ஜினை ரயில்பாதையில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மதுரையில் இருந்து ரயில்கள் இயக்கப்படாமலும். மறுமார்க்கமான மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள் மானாமதுரை நிலையத்திலும் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.