கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், கள்ளக்குறிச்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வருவோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், கள்ளக்குறிச்சி சென்று நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.