கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு எதிரொலியாக ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் தமிழகத்தின் பல்வேற பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நள்ளிரவில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.