ஜாமின் வழங்கக்கோரி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வரும் ஜூலை 3-ந்தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி நியாய் பிந்து ஜாமீன் குறித்த தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.