மயிலாடுதுறை அருகே திருடுபோன நகையை கண்டுபிடித்துத் தரக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரியில் டி.மணல்மேட்டைச் சேர்ந்த ராஜதுரை என்பவரது மனைவி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கைப்பை திருடு போனது.
அதில் செல்போன், 4 சவரன் நகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொறையார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருடுபோன நகையை கண்டுபிடித்துத் தரக்கோரி, ராஜதுரையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.