திருப்பூரில் சாப்பிட வைத்திருந்த பிரியாணி பொட்டலத்தில் மண் விழுந்ததை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் கோல்டன் நகர் நாராயணபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் டீக்கடைக்கு சென்றபோது, பயங்கர ஆயுதங்கள் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
விசாரணையில் மது அருந்தியபோது சதீஷ்குமார் திறந்து வைத்திருந்த பிரியாணி பொட்டலத்தில் மண் விழுந்தது தொடர்பாக சிலருடன் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த கும்பல், சதீஷ்குமாரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நால்வரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.