திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக்கோரி விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றது.
எண்ணூர் சுனாமி குடியிருப்பில், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து மீட்டெடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி வீதியாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தட்டிக் கேட்போம் என ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.