தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே 370 கிலோ குட்காவை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அசூர் புறவழிச் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 370 கிலோ குட்காவை கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து காருடன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.