ஈரோடு மாவட்டம், ஆலுத்துபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
எழுமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன, அதன்பேரில் சோதனை நடத்திய போலீசார் அக்கல்லூரியில் பயிலும் ஆறுமுகம் என்ற மாணவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மாணவனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.