கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ் தலைமையில், காமராஜ் மார்க்கெட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டிருந்த மைக்செட், ஒலிபெருக்கி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் எம்ஜிஆர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் பாஜக கொடியையும் அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு 100-க்கும்
மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.