தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவுடையானூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது சகோதரர் சரவணன், பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரன்ஸ், கோகுல், அர்ஜூன், பிரவீன், மகாராஜா ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.