நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான சகோதரர் விஜய் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக, சமூகப் பொறுப்புடன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்திருக்கும் சகோதரர் விஜய் அவர்களின் கலை மற்றும் அரசியல் பணிகள், இனிதே சிறப்புற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.