“கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரம் தொடர்பாக, விரிவான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்” என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்திய அவர், பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, “கள்ளச்சாராயம் விற்பனை செய்வதற்கு தூண்டுகோலாகவும், உடந்தையாகவும் இருந்த அரசு அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயும்” என்றார்.
மேலும், “கள்ளச்சாராயம் விற்பனை விவகாரத்தில், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு தொடர்பு உள்ளது” எனவும், “சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.