ஹரியானாவில் போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பரீதாபாத் பல்லாப்கர் பேருந்து நிலையம் அருகே கார் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தது.
அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவலர், அதன் ஓட்டுநரிடம் சென்று ஆவணங்களைக் கேட்டபோது, மதுபோதையிலிருந்த அவர் உடனடியாக காரை இயக்க தொடங்கினார்.
காரின் கதவு திறந்திருந்த நிலையில் போக்குவரத்து காவலர் அதில் சிக்கியதோடு சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஒருவழியாக கார் நின்றதும் அதன் ஓட்டுநரை போக்குவரத்து காவலர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.