குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஹோட்டலில் வழங்கப்பட்ட சாம்பாரில் எலி இறந்து கிடந்ததால், தம்பதி அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அகமதாபாத்தைச் சேர்ந்த அவினாஷ், தேவி தம்பதி ஹோட்டலுக்கு சென்று தோசை ஆர்டர் செய்தனர். அப்போது வழங்கப்பட்ட சாம்பாரில் எலி இறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், சுகாதாரத் துறையிடம் முறையிட்டனர். இதையடுத்து சுகாதாரத் துறையினர் அந்த ஹோட்டலில் ஆய்வு செய்து, சீல் வைத்தனர்.