கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கதக்கதுஎன்றார்.
மேலும், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உண்மை வெளியேவர வேண்டும் எனில், சி.பி.ஐ. விசாரணை தேவை” என தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், “நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு மத்திய அரசு அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது” எனவும் குறிப்பிட்டார்.