கேரள மாநிலம் ஷொரனூர் ரயில் நிலையத்தில், வடைக்கு வழங்கப்பட்ட சட்னியில் தவளை ஒன்று இறந்து கிடந்ததால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஒருவர், ஷொரனுர் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் இரண்டு வடைகளை வாங்கியுள்ளார்.
அதில் வழங்கப்பட்ட சட்னியில் தவளை ஒன்று இறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ரயில்வே அதிகாரிகளுக்கும், உணவு பாதுகாப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அக்கடையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்தனர்.