நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைதான 6 பேருக்கு பீகார் மாநிலம் பாட்னா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
பீகாரில் நீட் தேர்வின்போது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை போலீஸார் பாட்னா அழைத்து வந்தனர். இந்த நிலையில், வழக்கமான பரிசோதனைக்காக 6 பேரும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பரிசோதனைக்குப் பின்னர், 6 பேரும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.