பொதுமக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், வரிச் சீர்திருத்தம் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தங்களைப் பொருத்தவரை சீர்திருத்தம் என்றால், 140 கோடி மக்களின் வாழ்வை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமென கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின் வீட்டு உபயோக பொருட்களின் விலைவாசி கணிசமாக குறைந்திருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இதனால் ஏழைகள் மற்றும் சாமானிய மக்களின் பணம் சேமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தாங்கள் கடமைப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.