அதிகாரத்துக்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் பலமுறை நசுக்கியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
எகஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அவசர நிலையின்போது பொதுமக்கள் மீது இரக்கமற்ற கொடுமைகளை இந்திரா காந்தி கட்டவிழ்த்து விட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், தனது பாட்டி அவசரநிலையை பிரகடனப்படுத்தியதை காங்கிரஸின் இளவரசர் மறந்துவிட்டதாக ராகுல் காந்தியை அமித் ஷா மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும், அவசர நிலையை ஆதரித்து ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றியதை நினைவுகூர்ந்த அமித் ஷா, ‘அவசரநிலையை பிரகடனப்படுத்தியதில் எந்தவித தவறும் இல்லை’ என ராஜீவ் காந்தி பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘தேவைப்படும் தருணத்தில் எந்தவொரு பிரதமரும் அவசரநிலையை பிரகடனப்படுத்தவில்லை என்றால், அவர் பிரதமராக நீடிப்பதற்கே தகுதியற்றவர்’ என்றும் ராஜீவ் காந்தி பேசியதாக அமித் ஷா அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.