தமிழகத்தில் நீலகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கூடலூரில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.