முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நாடாளுமன்றம் வன்மையாக கண்டிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
18-வது மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் பொறுப்பேற்றதும், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரச்சினை அவையில் பூதாகரமாக வெடித்தது.
அப்போது பேசிய ஓம் பிர்லா, அவசர நிலையை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த தருணத்தில் தீரத்துடன் போராடி, ஜனநாயக மாண்பைக் காத்தவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும் என்று கூறிய ஓம் பிர்லா, அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனம் மீது இந்திரா காந்தி தாக்குதல் தொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
அவசர நிலையின்போது ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டு, கருத்து உரிமை நெறிக்கப்பட்டதாகவும் ஓம்பிர்லா வேதனை தெரிவித்தார்.