கும்பகோணம் அருகே சில்லறை இல்லை எனக் கூறி கர்ப்பிணியை, தனியார் பேருந்து நடத்துனர் நடுரோட்டில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக கர்ப்பிணி ஒருவர் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து பாதி தூரம் சென்ற நிலையில், 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார்.
ஆனால், சில்லரை இல்லை எனக்கூறி கர்ப்பிணி பெண்ணை நடத்துனர் பாதி வழியிலே இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக பெண் பயணி, நடத்துநரை சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.