கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பியதாக ஆர்.எஸ்.பாரதியிடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணத்தில், அண்ணாமலையின் சதி இருக்குமோ என சந்தேகம் எழுவதாக, செய்தியாளர் சந்திப்பின்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தம் மீது அவதூறு பரப்பியதாக ஆர்.எஸ்.பாரதியிடம் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த பணத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.