தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கக் கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டரங்கம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசிய விவசாயி ஒருவர், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும் அரசு, ஏன் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்குவதில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும் பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கக் கூடாது எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.