மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் செயல்களால் அங்கு செல்ல அச்சமாக இருப்பதாக பெண்கள் சிலர் தன்னிடம் கூறியதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ், மக்கள் பிரதிநிதிகள் தரம் தாழ்ந்த கருத்துகளை கூறக் கூடாது என அறிவுறுத்தினார்.
மேலும், மம்தா பானர்ஜி மீது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.