மேட்டுப்பாளையம் அரசு பணிமனையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அரசு பேருந்தின் Steering பழுதடைந்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை மாநகருக்கு நாள்தோறும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அரசு பேருந்து பணிமனையில் இருந்து கோவை மாநகருக்கு செல்லும் பேருந்து ஒன்றின் ஸ்டியரிங் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கும் பேருந்து உறுதித்தன்மை இல்லாமல் பழுதடைந்து இருப்பது பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.