காங்கிரஸை அழைக்காத திமுக - விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!
Aug 7, 2026, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 12:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸை அழைக்காமல் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில், இண்டி கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் விசிக மாநில செயலாளர் அரிமா தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சலீம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு இண்டி கூட்டணியின் மற்றொரு முக்கிய அங்கமான காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது மோதல் போக்கு வெடித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக நடத்திய கூட்டத்தை பற்றி தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தங்களை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, இது ஒரு சாதாரணச் சந்திப்பு என்றும் தான் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சியினரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தாகவும் கூறியுள்ளார். விரைவில் காங்கிரஸ் கட்சியினரையும் சந்திப்போம் எனவும் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

Tags: Communist partiesCongressvckPuducherry assembly electionDMK talks with alliance
Share
Tweet
SendShare
Previous Post

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

Next Post

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies