கடலூரில் அதிமுக பிரமுகரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வண்டி பாளையம் ஆலை காலனி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான புஷ்பநாதன், தமது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது சூரசம்காரத் தெருவில் அவரை வழிமறித்த மர்மநபர்கள் புஷ்பநாதனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.