ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என அவரது மகன் புகார் தெரிவித்துள்ளார்.
கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த ராஜன், கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் அவதியடைந்து வந்தார்.
அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
பின்னர் திடீரென ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாககூறி வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் பிரதாப் உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.