டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணி வீரர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணியை கோப்பையை வென்றுள்ளது.
இந்திய அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேப்டன் ரோஹித் ஷர்மாவின் தலைமையையும், டி-20 போட்டிகளில் அவரது சிறந்த ஆட்டத்திறனையும், பிரதமர் மோடி பாராட்டினார். அதேபோல், இறுதிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி அளித்த பங்களிப்பிற்காக பாராட்டு தெரிவித்தார்.
ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோரையும் பாராட்டிய பிரதமர் மோடி, பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் ராகுல் டிராவிட்டையும் வாழ்த்தினார்.