சென்னை எம்.ஆர்.சி நகரில் பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டிலிருந்த 250 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்..
எம்.ஆர்.சி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பங்குச்சந்தை வர்த்தகர் கோபாலகிருஷ்ணன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டிலிருந்த 250 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருடு போன மொத்த நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூபாய் 2 கோடி என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோபாலகிருஷ்ணனின் ஓட்டுநரான சரவணனிடம் முதற்கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.